Aug 04, 2020
ஹாலிவுட் செய்திகள்

மீண்டும் அனபெல்லா

கான்ஜூரிங் ஹாலிவுட் ஹாரர் படத்தில் வரும் பொம்மைதான் அனபெல்லா, இந்த பொம்மையை வைத்து இதற்கு முன் 2 பேய் கதை படங்கள் வெளிவந்தன. அதன் வரிசையில் 3வது பாகமாக அனபெல்லா கம்ஸ் ஹோம் திரைக்கு வருகிறது. கேரி டவுபர்மென் இயக்கியுள்ளார். அனபெல்லா பொம்மைக்குள் நுழைந்துள்ள பேய், குறிப்பிட்ட ஒரு குடும்பத்தை என்ன செய்கிறது என்ற வகையிலான கதை அமைப்போடு உருவாகியுள்ள இந்த படத்தில் மடிசன் ஐஸ்மென், மெக்கன்ன கிரேஸ், பாட்ரிக் வில்சன் உள்பட பலர் நடித்துள்ளனர். தமிழ், தெலுங்கு, இந்தியிலும் வரும் 28ம் தேதி படம் வெளியாகிறது.