Jul 11, 2020
ஹாலிவுட் செய்திகள்

ஸ்ரத்தா ஸ்ரீநாத் மாற்றம்

தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழி படங்களில் நடித்து வருகிறார், ஸ்ரத்தா ஸ்ரீநாத். தற்போது விஷாலுடன் சக்ரா என்ற படத்தில் நடிக்கிறார். இந்நிலையில், சமீபத்தில் சர்வதேச மாதவிடாய் சுகாதார தினம் கொண்டாடப்பட்டது. இதுதொடர்பாக தனது இன்ஸ்டாகிராம் பதிவில் ஸ்ரத்தா ஸ்ரீநாத் கூறுகையில், "எனக்கு 14 வயது இருக்கும்போது, என் குடும்பத்தில் விசேஷ பூஜை நடந்தது. அந்த நேரத்தில் திடீரென்று எனக்கு மாதவிடாய் ஏற்பட்டது. அப்போது என் அம்மா இல்லாததால், அத்தையிடம் இதுபற்றி அதிக கவலையுடன்  தெரிவித்தேன். 

அப்போது நான் சானிட்டரி நாப்கின் கொண்டு வரவில்லை. எனக்கு அருகில் இருந்த பெண்மணி ஒருவர், நான் கவலையுடன் இருப்பதை பார்த்துவிட்டார். நான் பேசுவதை கேட்டுவிட்டு என்னிடம் வந்த அவர், 'கவலைப்படாதே. கடவுள் உன்னை (மாதவிடாய் காலத்தில் பூஜையில் கலந்துகொண்டதற்காக) நிச்சயம் மன்னிப்பார்' என்று  சொன்னார்.  அன்று முதல் நான் ஒரு பெண்ணியவாதியாகவும், கடவுள் மறுப்பாளராகவும் மாறிவிட்டேன்" என்று தெரிவித்துள்ளார்.