Jul 11, 2020
ஹாலிவுட் செய்திகள்

சினிமா படப்பிடிப்புக்கு தெலங்கானா அரசு அனுமதி

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தேசிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட பிறகு இந்தியா முழுவதும் உள்ள அனைத்து தியேட்டர்களும் மூடப்பட்டன. கடந்த 70 நாட்களுக்கும் மேலாக எந்த மொழி சினிமா படப்பிடிப்பும் நடக்கவில்லை. தற்போது பல மாநிலங்களில் ஊரடங்கு தளர்த்தப்பட்டு வருகிறது. அதன்படி மகாராஷ்டிரா மாநில அரசு பல்வேறு நிபந்தனைகளுடன் சினிமா படப்பிடிப்புகளுக்கு அனுமதி வழங்கியுள்ளது. தமிழ்நாடு அரசு சின்னத்திரை படப்பிடிப்புகளுக்கு அனுமதி கொடுத்துள்ளது. இதை தொடர்ந்து தெலங்கானா மாநில அரசும் நேற்று முன்தினம் முதல் சினிமா படப்பிடிப்புகளுக்கு அனுமதி அளித்துள்ளது.

சினிமா மற்றும் டி.வி நிகழ்ச்சிகளுக்கான படப்பிடிப்புகளை குறைந்த எண்ணிக்கையிலான தொழிலாளர்களுடன் மீண்டும் தொடங்கலாம். அரசாங்கம் வழங்கிய வழிகாட்டுதல்களை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். தயாரிப்புக்கு பிறகான பணிகளிலும்  அரசின் வழிகாட்டுதலை பின்பற்ற வேண்டும். மத்திய அரசின் வழிகாட்டுதலுக்கு பிறகே தியேட்டர்களை திறப்பது பற்றி பரிசீலிக்கப்படும். இவ்வாறு தெலங்கானா அரசு விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.