Dec 01, 2020
ஹாலிவுட் செய்திகள்

5 வருடமாக மன அழுத்தத்தில் சிக்கி தவிக்கும் நடிகை

தெலுங்கில் பிரயாணம், ஊசரவெல்லி உள்பட பல படங்களில் நடித்தவர் பாயல் கோஷ். இவர் கடந்த 5 வருடமாக மன அழுத்தம் நோய் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இது குறித்து பாயல் கோஷ் கூறியது: கடந்த 5 வருடமாக மன அழுத்தம் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளேன். வாழ்க்கையே இருண்டு போனதுபோல் ஒரு உணர்வு. வாழப் பிடிக்காமல் தினந்தோறும் வாழ்ந்து வருகிறேன். ஆனாலும் சோர்ந்து போகவில்லை. தொடர்ந்து வாழ்க்கையோடு போராடிக் கொண்டிருக்கிறேன். இதற்காக மருந்துகளை எடுத்துக் கொள்கிறேன். தனிமையில் இருப்பது போன்ற உணர்வு எப்போது ஏற்பட்டாலும் நெருங்கிய உறவுகள், நண்பர்களை அழைத்துக் கொள்கிறேன். அவர்களோடு நேரம் கழிக்கிறேன். சமூக வலைத்தளம் கூட நேரம் போக்குவதற்கு மாற்று வழியாக இருக்கிறது. இந்த நேரத்தில்தான் பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங்கின் தற்கொலை என்னை நிலைகுலைய செய்திருக்கிறது. அவரும் மன அழுத்தத்தில் இருந்துள்ளார். தனிமையில் இருப்பதாக எண்ணாமல், அவர் அனைத்து விஷயங்களையும் நண்பர்களுடன் பகிர்ந்து இருக்கலாம். தனிமையால்தான் அவர் இந்த முடிவு எடுத்திருக்கலாம். இதுபோன்ற உணர்விலிருந்து நானும் சீக்கிரமே விடுபட்டு வருவேன் என நம்புகிறேன். இவ்வாறு பாயல் கோஷ் கூறியுள்ளார்.