Dec 03, 2020
ஹாலிவுட் செய்திகள்

ஜாக்கிசான் வீடு ஏலம்

சீன தலைநகர் பெய்ஜிங்கில் குடும்பத்துடன் வசித்து வருகிறார், ஜாக்கிசான். 2007 முதல் ெசாகுசு அடுக்குமாடி கட்டிடத்தில் வசிக்கிறார். அவரது வீடு 13 ஆயிரத்து 100 சதுர அடி பரப்பளவு கொண்டது. 6 படுக்கை அறைகளும், 3 ஹால்களும் உள்ளது. இந்த வீட்டின் மதிப்பு 14.9 மில்லியன் டாலர். இதில் ஜாக்கிசான் 9 மில்லியன் டாலர்களை கட்டுமான நிறுவனத்துக்கு செலுத்தி இருக்கிறார். மீதியை தவணையாக கொடுப்பதாக ஒப்பந்தம் போட்டிருந்தார்.

இந்நிலையில், ஜாக்கிசானுக்கு வீட்டை விற்ற கட்டுமான நிறுவனத்துக்கும், அதன் போட்டி நிறுவனத்துக்கும் இடையே நடந்த வழக்கில், ஜாக்கிசானுடைய வீடு போட்டி நிறுவனத்துக்கு சொந்தமாகியுள்ளது. அந்த நிறுவனம் வீட்டை ஏலத்துக்கு கொண்டு வருகிறது. வரும் 30ம் தேதி ஏலம் நடக்கிறது. ஏலம் விடப்பட்ட தொகையில் இருந்து ஜாக்கிசான் இதுவரை கட்டிய தொகையை அந்நிறுவனம் கொடுத்துவிடும் அல்லது ஜாக்கிசானே ஏலத்தில் வீட்டை வாங்கிக் கொள்ளலாம். என்றாலும், பிரபல ஆக்‌ஷன் ஹீரோ ஜாக்கிசான் வாழ்ந்து வரும் வீடு ஏலத்துக்கு வந்திருப்பது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.