Jul 12, 2020
இந்தியா

மகாராஷ்டிராவில் ஜூலை 31ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு

மும்பை: நாட்டிலேயே கொரோனா பாதிப்பில் மகாராஷ்டிரா முதலிடத்தில் உள்ளது. இங்கு அசுர வேகத்தில் கொரோனா பரவி வருகிறது. தானே, கல்யாண் - டோம்பிவிலி, புனே என மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு, நாள் அதிகரித்து வருகிறது. அம்மாநிலத்தில் நேற்று மட்டும் 5 ஆயிரத்து 493 பேருக்கு நோய் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதுவரை மாநிலத்தில் 1 லட்சத்து 64 ஆயிரத்து 626 பேரை கொரோனா தாக்கி உள்ளது. நேற்று 2 ஆயிரத்து 330 பேர் குணமடைந்து உள்ளனர். இதேபோல மகாராஷ்டிராவில் நேற்று மேலும் 156 பேர் கொரானாவுக்கு பலியாகினர்.

இதுவரை பலியானவர்கள் எண்ணிக்கை 7 ஆயிரத்து 429 ஆகி உள்ளது. கொரோனா பரவலை தொடர்ந்து பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு தொடர்ந்து அங்கு நீட்டிக்கப்பட்டு வருகிறது. 5வது கட்ட ஊரடங்கு நாளையுடன் முடிவடைகிறது. இந்நிலையில், மேலும், அதிரடியாக ஜூலை 31ம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து மகாராஷ்டிரா அரசு உத்தரவிட்டுள்ளது.