இந்தியா
கொரோனா அச்சுறுத்தல்!: சபரிமலையில் மகரவிளக்கு பூஜை காலத்தில் ரூ. 21.17 கோடியாக குறைந்த வருவாய்..!!
திருவனந்தபுரம்!: சபரிமலையில் இந்தாண்டு மகரவிளக்கு பூஜை காலத்தில் ரூபாய் 21.17 கோடி மட்டுமே வருவாய் கிடைத்துள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக குறைந்த அளவிலேயே பக்தர்கள் அனுமதிக்கப்பட்டதால் வருவாய் குறைந்தது. கடந்தாண்டு மகர விளக்கு பூஜை காலத்தில் ரூபாய் 269 கோடி வருவாய் கிடைத்த நிலையில் தற்போது 92.2 சதவீதம் குறைந்துள்ளது.