Jul 07, 2020
கோலிவுட் செய்திகள்

போலீசாரிடம் பயிற்சி பெற்ற ஹீரோ

ரிஷி ரித்விக், ஆஷா பாத்தலோம், டாக்டர் சீனிவாசன் நடித்துள்ள படம், மரிஜுவானா. ஒளிப்பதிவு, பாலா ரோசய்யா. இசை, கார்த்திக் குரு. இயக்கம், எம்.டி.ஆனந்த். படம் குறித்து ரிஷி ரித்விக் கூறியதாவது: அட்டு படத்துக்கு பிறகு இதில் நடிக்கிறேன். காவல்துறை அதிகாரி கேரக்டர் என்பதால், அங்கு பணியாற்றும் என் அண்ணன் மற்றும் சில போலீசாருடன் சென்று, போலீஸ்காரர்களின் பாடிலாங்குவேஜை கற்றுக்கொண்டேன்.

மரிஜுவானா என்பது கஞ்சா. ஆனால், கஞ்சாவை நேரடியாக காட்டவில்லை. இலையையும், சாணத்தையும் வைத்து காட்சிகள் படமாக்கப்பட்டது. சைக்கோ திரில்லர் வகை படமான இதில், ஒருவன் அதிகமான போதைக்கு அடிமையானால் என்ன நடக்கும் என்பதை சொல்கிறோம். அடுத்த மாதம் படம் வெளியாகிறது.