Feb 27, 2020
கோலிவுட் செய்திகள்

நானும் சிங்கிள்தான்

த்ரீ இஸ் எ கம்பெனி மற்றும் ஜெயகுமார், புன்னகை பூ கீதா இணைந்து தயாரித்துள்ள படம், நானும் சிங்கிள்தான். தினேஷ், தீப்தி திவேஸ், நான் கடவுள் ராஜேந்திரன், மனோபாலா, செல்வேந்திரன் நடித்துள்ளனர். ஒளிப்பதிவு, டேவிட் ஆனந்தராஜ். இசை, ஹித்தேஷ் மஞ்சுநாத். பாடல்கள், கபிலன் வைரமுத்து. இயக்கம், கோபி. நயன்தாரா மாதிரி ஒரு பெண்ணை திருமணம் செய்ய ஆசைப்படும் ஹீரோவின் எண்ணம் நிறைவேறியதா என்பது கதை. அடுத்த மாதம் படம் ரிலீசாகிறது.