Jul 07, 2020
கோலிவுட் செய்திகள்

வலிமையில் வில்லனா? பிரசன்னா பதில்

அஜித் நடிப்பில் வினோத் இயக்கி வரும் படம் வலிமை. இதில் பிரசன்னா வில்லனாக நடிப்பதாக தகவல் பரவியுள்ளது. சிலர், இதில் அவர் அஜித்துக்கு நண்பராக நடிக்கிறார் என்றும் கூறி வருகிறார்கள். இதற்கு பிரசன்னா அளித்த பதில்: வலிமையில் நான் நடிப்பதற்கான பேச்சு நடந்தது உண்மை. இதை அறிந்து, நான் இதில் நடிக்க வேண்டும் என விருப்பம் தெரிவித்த ரசிகர்களுக்கு நன்றி சொல்லிக் கொள்கிறேன். என் வாழ்க்கையில் ஒரு பெரிய அறிவிப்பை வெளியிடுவேன் என நானே எதிர்பார்த்து காத்திருந்தேன்.

ஆனால் சில காரணங்களால் எதிர்பார்த்தது நடக்கவில்லை. இந்த முறை நான் அஜித்துடன் நடிக்கும் வாய்ப்பு அமையவில்லை. இந்த ஏமாற்றம், நீங்கள் அளிக்கும் அன்பால் என்னை வலிமையாக்கும் என நம்புகிறேன். கண்டிப்பாக மற்றொரு தருணத்தில் அஜித்துடன் சேர்ந்து நடிக்கும் வாய்ப்பு அமையும் என்றும் எதிர்பார்க்கிறேன். இவ்வாறு பிரசன்னா கூறியுள்ளார்.