Apr 07, 2020
கோலிவுட் செய்திகள்

கிரேன் என் மீது விழுந்திருக்க வேண்டும் - ஷங்கர் உருக்கம்

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு பூந்தமல்லி இவிபி பிலிம் சிட்டியில் நடந்தபோது, கிரேன் விழுந்ததில் 3 பேர் பலியானார்கள். இது குறித்து இயக்குனர் ஷங்கர் டிவிட்டரில் நேற்று கூறும்போது,  ‘மிக மனவேதனையுடன் ட்வீட் செய்கிறேன். அந்த விபத்து நடந்ததில் இருந்து அதிர்ச்சியில் இருக்கிறேன்.

என் உதவி இயக்குனர் உள்ளிட்டோர் இழப்பால் தூக்கம் இல்லாமல் இருக்கிறேன். கிரேன் விபத்திலிருந்து மீண்டதற்கு பதில் அது என் மீது விழுந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். பலியானோரின் குடும்பத்தாருக்கு என் ஆழந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்’ என்றார்.