Apr 04, 2020
கோலிவுட் செய்திகள்

கன்னடம் கற்கிறார் பிரியா ஆனந்த்

கன்னட படத்தில் நடிக்க இருக்கிறார் பிரியா ஆனந்த். தமிழில் எல்கேஜி படத்தில் ஹீரோயினாக பிரியா ஆனந்த் நடித்தார். அதன் பிறகு ஆதித்ய வர்மா படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்தார். இப்போது தமிழில் அவருக்கு வேறு படம் எதுவும் இல்லை. இந்நிலையில் கன்னடத்தில் கவனம் செலுத்த அவர் முடிவு செய்துள்ளார்.

சிவராஜ்குமார் நடிக்கும் ஆர்டிஎக்ஸ் படத்தில் அவர் நடிக்கிறார். இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கிறது. இந்த படத்துக்கு முன்பாக கன்னடத்தில் புனித் ராஜ்குமார் ஜோடியாகவும் ஒரு படத்தில் பிரியா ஆனந்த் நடித்திருந்தார். இப்போது சிவராஜ்குமாருடன் நடிக்கும் படத்துக்காக அவர் கன்னடம் பேச கற்று வருகிறார்.