Apr 07, 2020
கோலிவுட் செய்திகள்

தமிழுக்கு வரும் நீரஜ் பாண்டே

எ வெட்னஸ்டே (தமிழில் உன்னைப்போல் ஒருவன்), ஸ்பெஷல் சப்பீஸ் (தமிழில் தானா சேர்ந்த கூட்டம்), ருஸ்தம், டோனி, பேபி உள்ளிட்ட இந்தி படங்களை இயக்கியவர் நீரஜ் பாண்டே. முதல்முறையாக தமிழுக்கு வருகிறார். அவர், இயக்குனர் ஷிவம் நாயருடன் சேர்ந்து இயக்க உள்ள வெப்சீரிஸ் ஸ்பெஷல் ஆப்ஸ்.

ஸ்பை திரில்லர் கதையாக இந்த வெப்சீரிஸ் உருவாகிறது. நீரஜ் பாண்டே தயாரித்துள்ள இதை, தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியிட உள்ளார். கே.கே.மேனன், சனாகான், வினய் பதக் உள்பட பலர் நடித்துள்ளனர். விரைவில் வெளியாக உள்ளது.