Apr 07, 2020
கோலிவுட் செய்திகள்

தமிழ் படத்தில் அமிதாப் பச்சன்

சமூக சேவகர் பாலம் கல்யாணசுந்தரம் வாழ்க்கை சினிமா படமாகிறது. ஆங்கிலத்தில் வெளியான அவரது வாழ்க்கை வரலாற்று புத்தகத்தை படித்த அமிதாப் பச்சன், ‘கல்யாணசுந்தரத்தின் வாழ்க்கை என்னை நெகிழ வைத்தது. அவரது வாழ்க்கை வரலாற்று படத்தில் நானே  நடிக்கிறேன். இளமைக்கால கேரக்டரில் என் மகன் அபிஷேக் பச்சன் நடிப்பார்’ என்று, பாலிவுட் தயாரிப்பாளர் பரண் ஆதர்ஷிடம் கூறியுள்ளார்.

இதையடுத்து பரண் ஆதர்ஷ் சென்னைக்கு வந்து கல்யாணசுந்தரத்தை சந்தித்தார். தற்போது இப்படத்தின் முதற்கட்டப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. கல்யாணசுந்தரத்தின் அம்மாவாக வித்யாபாலன்  நடிக்கிறார். தமிழ், இந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் படம் உருவாகிறது.