May 26, 2020
கோலிவுட் செய்திகள்

பல்லாங்குழியாடும் நடிகை குஷ்பு

கொரோனா வைரஸ் மனிதர்களை மட்டுமல்லாமல் கம்ப்யூட்டர்களையும் பாதித்திருக்கிறது. வீடியோ கேம்ஸில் மூழ்கியிருந்தவர்கள் இப்போது அதிலிருந்து வெளியேறியிருக்கின்றனர். ஒருவர் ஆடிய கீ போர்ட், மவுசில் இன்னொருவர் கை வைத்தால் அங்கிருந்தும் வைரஸ் பரவும். இதனால் பலர் வீடியோ கேம்ஸ் ஆடுவதற்கு முழுக்குபோட்டிருக்கிறனர். நடிகை குஷ்பு ஓய்வு நேரத்தில் கேம்ஸ் ஆடுவது வழக்கம்.

தற்போது அவர் வெளியில் எங்கும் செல்லாமல் வீட்டில் அமர்ந்து தாயம், பல்லாங்குழி என பண்டைய தமிழர் விளையாட்டை விளையாடுகிறாராம். இதனை தனது இணைய தள பக்கத்தில் தெரிவித்திருக்கும் அவர், ‘வேலை நிறைய இருந்தாலும் அவசியம் அவசரம் கருதியே வெளியில் செல்கிறேன். தற்போது வீட்டிலேயே நிறைய சினிமா பார்க்கிறேன், தாயம் பல்லாங்குழி விளையாடுகிறேன்’ என குறிப்பிட்டிருக்கிறார்.