Mar 05, 2021
கோலிவுட் செய்திகள்

எடை குறைத்த நித்யா மேனன்...!

ஓ காதல் கண்மணி படத்தில் ஸ்லிம்மாக காட்சியளித்த நித்யா மேனன், மெர்சல் படத்தில் கொஞ்சம் குண்டானார். அதன் பிறகு மேலும் உடல் எடை கூடி, பட வாய்ப்புகளை இழந்தார். இதேபோல் இருந்தால் சினிமாவிலிருந்து காணாமல் போகவேண்டியதுதான் என்பதை புரிந்துகொண்டார். இதையடுத்து தொடர்ந்து ஜிம், டயட் என இருந்து உடல் எடையை குறைத்துள்ளார்.

தமிழ், மலையாளம், தெலுங்கில் உருவாகும் படத்தில் அசோக் செல்வனுடன் இணைந்து நடிக்கிறார். இந்த படத்தில் முன்பை விட எடை குறைந்து காணப்படுகிறார். ‘உடல் எடை திடீரென அதிகரிக்க, மனநலம் பாதிக்கப்பட்டதும் காரணம். ஆனால் அதை பற்றியெல்லாம் யாரும் கவலைப்பட்டதாக தெரியவில்லை. என்னை விமர்சனம் செய்வதிலேயே பலரும் குறியாக இருந்தார்கள்.

தொடர் விடாமுயற்சியால் இப்போது பழைய தோற்றத்துக்கு மாற முடிந்தது. இப்போது நிறைய வாய்ப்புகள் வருகிறது. எல்லாவற்றையும் ஒப்புக்கொள்வதில்லை. நல்ல கதையும் நல்ல கேரக்டரும் கொண்ட படமாக இருக்க வேண்டும் என்பதில் தீர்மானமாக இருக்கிறேன். அதுபோல் வாய்ப்பு வந்தால் மட்டுமே அதற்கு முக்கியத்துவம் தருகிறேன்’ என்றார் நித்யா மேனன்.