May 22, 2022
கோலிவுட் செய்திகள்

மன்மத லீலை தலைப்புக்கு பாலச்சந்தர் ரசிகர்கள் எதிர்ப்பு

வெங்கட் பிரபு இயக்கும் புதிய படம் மன்மத லீலை. இதில் அசோக் செல்வன், சம்யுக்தா ஹெக்டே, ஸ்ருதி வெங்கட் நடிக்கிறார்கள். மன்மத லீலை கே.பாலச்சந்தர் இயக்கிய படத்தின் தலைப்பு.  இந்த தலைப்பை வெங்கட்பிரபு பயன்படுத்தக்கூடாது என்று கே.பாலச்சந்தர் ரசிகர் மன்ற செயலாளர் கவிதாலயா வி.பாபு கூறியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: 1976ம் ஆண்டு, கலாகேந்திரா நிறுவனத்தின் கோவிந்தராஜன், துரைசாமி,தயாரிப்பில்,கே.பாலசந்தர்  கதை, திரைக்கதை,வசனம், இயக்கத்தில் உருவான படம் மன்மத லீலை. இந்த படம் வெளியாகி 46 ஆண்டுகள் ஆகிறது. மன்மத லீலை என்கிற பெயரை, கலா கேந்திரா தயாரிப்பாளர்களின் அனுமதி இல்லாமல், வெங்கட்பிரபு தான் இயக்கும் படத்திற்கு வைத்துள்ளார்.

இது தவறான செயலாகும். கலாகேந்திரா நிறுவனத்தார்களிடம் பேசி,அனுமதி பெறாமல் இதே பெயரில் திரையிட்டால், கே.பாலசந்தர் ரசிகர்கள் சங்கம் கடுமையாக  எதிர்க்கும். கலா கேந்திரா நிறுவனத்தார்கள், சட்ட ரீதியாக நீதிமன்றம் நாடி நடவடிக்கை எடுப்பார்கள் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு அவர் தனது அறிக்கையில் தெரிவி்திருக்கிறார்.