Jul 07, 2022
கோலிவுட் செய்திகள்

சமூக வலைத்தளத்திலிருந்து வெளியேறினார் விஷ்ணு விஷால்

வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலம் அறிமுகமாகி பல படங்களில் நடித்திருக்கிறார் விஷ்ணு விஷால். அவர் நடித்த ராட்சன், குள்ளநரிகூட்டம், எப்.ஐ.ஆர் படங்கள் கவனிக்க வைத்தது. தற்போது மோகன்தாஸ் படத்தில் விஷ்ணு விஷால் நடித்து முடித்துள்ளார். இந்த படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. நடிகர் விஷ்ணு விஷால் டுவிட்டர் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் தீவிரமாக செயல்பட்டு வந்தார்.

இந்த நிலையில் சமூக வலைத்தளங்களில் இருந்து தற்காலிகமாக விலகுவதாக அறிவித்து உள்ளார். இது குறித்து டுவிட்டரில் விஷணு விஷால் வெளியிட்டுள்ள பதிவில், ''ஓய்வு எடுப்பது வாழ்க்கைக்கு முக்கியம். நான் சமூக வலைத்தளங்களில் இருந்து கொஞ்ச காலத்துக்கு ஓய்வு எடுத்துக் கொள்கிறேன். விரைவில் சந்திப்போம்' 'என்று கூறியுள்ளார். தனது தந்தை மீது சூரி தொடர்ந்துள்ள மோசடி வழக்கு, மனைவியை விவாகரத்து செய்தது தொடர்பாக ரசிகர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருவதால் விலகி இருப்பதாக கூறப்படுகிறது.