Dec 03, 2020
அரசியல்

தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு 3ம் கட்ட சுற்றுப்பயணம்: திமுக அறிவிப்பு

சென்னை: திமுக தலைமைக் கழகம் வெளியிட்ட அறிவிப்பு: 2021ல் நடைபெற உள்ள தமிழக சட்டப்பேரவைப் பொதுத் தேர்தலையொட்டி திமுக  தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள ஒருங்கிணைப்பாளர் டி.ஆர்.பாலு தலைமையிலான குழுவினர் சுற்றுப்பயணம் மேற்கொண்டு  வருகின்றனர். இக்குழு 3ம் கட்டமாக வருகிற 4ம் தேதி மாலை 4 மணி-கடலூர் கிழக்கு, கடலூர் மேற்கு 5ம் தேதி காலை 9 மணி-நாகை வடக்கு  நாகை தெற்கு, மாலை 4 மணி-திருவாரூர். 6ம் தேதி காலை 9 மணி- தஞ்சை வடக்கு, தஞ்சை மத்திய, தஞ்சை தெற்கு. மாலை 4  மணி-புதுக்கோட்டை வடக்கு, புதுக்கோட்டை தெற்கு. 7ம் தேதி காலை 9 மணி-திருச்சி வடக்கு, திருச்சி தெற்கு, திருச்சி மத்திய. மாலை 4  மணி-அரியலூர் பெரம்பலூரில் சுற்றுப்பயணம் மேற்கொள்கின்றனர்.