Jan 28, 2021
அரசியல்

கொரோனா ஆய்வு கட்டணத்தை 800 ஆக குறைக்க வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கை: கொரோனா தொற்றைக் கண்டுபிடிப்பதற்கான ஆர்.டி. - பி.சி.ஆர் ஆய்வுக்கு தமிழகத்திலுள்ள தனியார் ஆய்வகங்களில் இந்தியாவின் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில், 3,000 முதல் 3,500 வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. மற்ற மாநிலங்களின் குறைந்தபட்ச கட்டணத்தை விட 4 மடங்குக்கும் கூடுதலாக கட்டணம் வசூலிக்கப்படுவதை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்காதது வருத்தமளிக்கிறது.

கொரோனா ஆய்வுக்கான கருவிகளின் விலை தொடக்கத்தில் மிகவும் அதிகமாக இருந்தது. ஆனால், இப்போது ஓர் ஆய்வுக்கான கருவியின் ரூ.200 ஆக குறைந்து விட்ட நிலையில், அதைவிட 15 மடங்கு கட்டணம் வசூலிப்பது நியாயமல்ல. எனவே, பொதுநலன் கருதி தமிழ்நாட்டில் தனியார் ஆய்வகங்களின் கொரோனா ஆய்வுக் கட்டணத்தை மற்ற மாநிலங்களுக்கு இணையாக ரூ.800 ஆக குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.