Oct 22, 2020
அறிவியல்

செயற்கை வைட்டமின்

நன்றி குங்குமம் முத்தாரம்

ஒரு மனிதன் சுறாவால் கொல்லப்படுவதை விட, பசுவினால் கொல்லப்படுவதற்கு 22 மடங்கு சாத்தியங்கள் அதிகம்.மனிதர்கள் காதல் வயப்படும்போது மூளையில் சுரக்கும் அதே வேதிப் பொருள், நாய்களுக்கும் சுரக்கிறது - அவற்றின் எஜமானர்களைக் காணும்போது.பறவையின் டி.என்.ஏ.வைப் பயன்படுத்தி டைனோசர்களை மீண்டும் பிறக்கச் செய்வது அறிவியல் ரீதியாகச் சாத்தியம். கார்ன்ஃப்ளேக்ஸில் வைட்ட மின் மற்றும் இரும்புச்சத்து ஆகியவை செயற்கையாகவே சேர்க்கப்படுகின்றன.

பூசணம் பூத்த ரொட்டிகளில் காணப்படும் பூஞ்சைகளில், உயிர் பறிக்கும் வகையும் உண்டு. தூங்கும் முன்பும், விழித்த உடனேயும் அரை கிளாஸ் தண்ணீர் குடிப்பவர்களால் தாங்கள் கண்ட கனவுகளில் பலவற்றை நினைவு கூற முடியும் என்பது ஒரு மனோதத்துவ ஆய்வு முடிவு!குழந்தை கருவில் இருக்கும்போது அதன் தாய் உண்ணும் உணவின் அடிப்படையிலேயே, குழந்தையின் ருசி உணர்வு அமைகிறது.