Apr 13, 2021
அறிவியல்

19 செயற்கைகோள்களுடன் பி.எஸ்.எல்.வி சி-51 ராக்கெட் நாளை விண்ணில் பாய்கிறது

சென்னை: பி.எஸ்.எல்.வி மற்றும் ஜி.எஸ்.எல்.வி ரக ராக்கெட்டுகளை இஸ்ரோ விண்ணில் வெற்றிகரமாக செலுத்தி வருகிறது. அந்தவகையில், பிரேசில் நாட்டை சேர்ந்த அமசோனியா-1 என்ற செயற்கைகோள் உட்பட 19 செயற்கைகோள்களை இஸ்ரோ ஆந்திர மாநிலம்  ஹரிகோட்டாவில் உள்ள சதீஸ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து நாளை காலை 10.24 மணிக்கு விண்ணில் ஏவுகிறது. அமசோனியா 1 செயற்கைகோளுடன் இந்தியாவை சேர்ந்த இன்ஸ்பேஸ் நிறுவனத்தின் யூனிட்டிசாட் 3 செயற்கைகோள்கள், ஒரு சதீஸ்தவான் சாட், நியூஸ்பேஸ் இந்தியா நிறுவனத்தின் 14 செயற்கைகோள்கள் உட்பட 19 செயற்கைகோள்கள் விண்ணில் செலுத்தப்படுகிறது. இதில், அமசோனியா-1 செயற்கைகோள் பூமியில் இருந்து 637 கி.மீ தூரத்தில் அதன் புவி வட்டப்பாதையில் நிலைநிறுத்தப்படும். இந்த செயற்கைகோள் காடுகள் அழிப்பை கண்காணிப்பதற்கு, பிரேசில் நாட்டின் விவசாயத்தை பகுப்பாய்வு செய்யவும் உதவும். பி.எஸ்.எல்.வி சி-51 ராக்கெட் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் ஏவப்படும் 78வது ராக்கெட் ஆகும். முதலாவது ஏவுதளத்தில் இருந்து ஏவப்படும் 39வது ராக்கெட். இதேபோல், பி.எஸ்.எல்.வி சி-51 ராக்கெட் இந்த ஆண்டின் முதல் திட்டமாகும்.