அறிவியல்
விண்வெளியில் உருவாகும் முதல் திரைப்படம்.. புதிய சூரிய மின் தகடுகளை பொறுத்த 2 விண்வெளி வீரர்கள் 6 அரை மணி நேரம் விண்வெளியில் நடைபயணம்!!
மொஸ்கொவ் : சர்வதேச விண்வெளி நிலையத்தில் புதிய சூரிய மின் தகடுகளை பொறுத்த 2 விண்வெளி வீரர்கள் 6 அரை மணி நேரம் விண்வெளியில் நடைபயணம் மேற்கொண்டனர்.சர்வதேச விண்வெளி நிலையத்தில் 20 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட சூரிய மின் தகடுகளின் திறன் குறைந்து வருவதை அடுத்து, புதிய மின் தகடுகளை பொறுத்த விஞ்ஞானிகள் முடிவு செய்தனர்.அதன் அடிப்படையில் ஜப்பான் நாட்டைச் சேர்ந்த Akihiko Hoshide மற்றும் பிரான்ஸை சேர்ந்த Thomas Pesquet ஆகியோர் சர்வதேச விண்வெளி நிலையத்தின் வெளியே 6 அரை மணி நேரம் நடந்து புதிய சூரிய மின் தகடுகளை பொருத்தினர்.
இதன் மூலம் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு 35% கூடுதல் மின்சாரம் கிடைக்கும் என்று விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.இதனிடையே சர்வதேச நிலையத்தில் படம் பிடிக்கப்பட்ட முதல் திரைப்படம் வருகிற அக் . 5 தேதி லான்ச் ஆகிறது. வைசவ் என பெயரிடப்பட்டுள்ள முதல் விண்வெளி திரைப்படத்தை பிரபல இயக்குனர் கிளிம் ஷிப்பென்கோ இயக்கியுள்ளார். கதையின் நாயகியாக யுலியா பெரெசில்ட் நடித்துள்ளார். திரைப்படத்தை ரஷியாவின் விண்வெளி ஆய்வு நிறுவனமான ராஸ்கோமாஸ் தயாரித்துள்ளது. ரஷிய மொழியில் வைசவ் என்றால் சவால் என்று அர்த்தம். இந்தநிலையில் விண்வெளியில்
படப்பிடிப்புக்கு தேவையான சாதனங்களை ‘பிராகிரஸ் எம்.எஸ். 17' விண்கலம் மூலம் ரஷியா சில மாதங்களுக்கு முன்பு சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு அனுப்பியது குறிப்பிடத்தக்கது.