Jul 05, 2020
ஸ்பெஷல்

பிளாஸ்டிக் ஒரு வரம் தான்... சாபம் அல்ல..

மனிதர்களின் அன்றாட வாழ்வாதாரம் பிளாஸ்டிக் பொருட்களை சார்ந்தே அமைந்து உள்ளது. இது சாபம் அல்ல, வரம் தான். ஆனால், பல ஆண்டுகளாக, நமக்கும், நமது சுற்றுச்சூழலுக்கும் பிளாஸ்டிக் அளிக்கும் ஆற்றலைப் புரிந்துகொள்ள மறந்துவிட்டோம். அதே சமயம் பிளாஸ்டிக் மறுசுழற்சியின் முக்கியத்துவத்தையும் புரிந்துகொள்ளாமல் இருந்து விட்டோம். பிளாஸ்டிக்கை மறுசுழற்சி செய்வது, சுற்றுச்சூழல் மற்றும் பொது சுகாதாரம் என இரண்டிற்குமே  பல்வேறு நன்மைகளை விளைவிக்கக் கூடியது என்பதை நாம் அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

நாம் தினசரி பயன்படுத்தும் பிளாஸ்டிக் அளவைக் கருத்தில் கொண்டால், பிளாஸ்டிக் இல்லாத உலகைப் உருவாக்குவது என்பது மிகவும் கடினமான ஒன்று. சந்தையில் பிளாஸ்டிக்கிற்கு பதிலாக மாற்று வழிகள் இருந்தாலும், அவை குறைபாடுகளுடன் வலம் வருகின்றன. பிளாஸ்டிக்கிற்கு பதிலான மாற்று வழிகளில் உள்ள குறைபாடுகள் என்ன, அதற்கான தீர்வு என்ன என்பதற்கான ஆழமான காரணங்களுக்குள் நுழைவோம்.

பி.இ.டி


பி.இ.டி அல்லது பாலிஎதிலீன் டெரெப்தாலேட் என்பது ஒரு தெர்மோபிளாஸ்டிக் பாலிமர் ஆகும், இது பாலியஸ்டர் குடும்பத்தைச் சேர்ந்தது.  நாம் தினசரி பயன்படுத்தும் அனைத்து பிளாஸ்டிக் பாட்டில்கள், பேக் செய்யப்பட்ட பானங்கள் மற்றும் கண்டெய்னர்களில் பொதுவாகப் பி.இ.டி பயன்படுத்தப்படுகிறது. பி.இ.டி யின் வலுவான கூறுகள், இலகுரகம்,துண்டுகளாக உடைப்படாத காரணங்களால்பெரிய உற்பத்தியாளர்கள் இதனை பயன்படுத்துகின்றனர், பாதுகாப்பு சோதனைகளை நடத்தும் பல்வேறு சுகாதார அமைப்புகளின் கூற்றுப்படி, பேக்கேஜிங்கில் பி.இ.டி யின் பயன்பாடு உணவு, பான பொருட்கள் மற்றும் மருந்து தயாரிப்புகளுக்கு பாதுகாப்பாகவே கருதப்படுகிறது.

பி.இ.டி- ஐப் பயன்படுத்துவதன் சில நன்மைகள்:


-இது எந்த நுண்ணுயிரிகளின் குறுக்கீட்டையும் எதிர்க்கும்.

-கழுவுதல், உருகுதல் அல்லது இரசாயன முறையில் பி.இ.டி யின் கூறுகளை பிரிப்பதன் மூலம் அதனை முழுமையாக மறுசுழற்சி செய்யமுடியும். கூறுகளை பிரிப்பதன் மூலம் கிடைக்கும் பி.இ.டி ரெசின் என்ற பொருள் மற்ற பி.இ.டி பொருட்களை உருவாக்க பயன்படுத்தப்படலாம்.

-பி.இ.டி யை முழுமையாக மறுசுழற்சி செய்வதன் மூலம் ஆற்றல் பயன்பாடு மற்றும் மாசுபாடு வெகுவாகக் குறையும்.

-பி.இ.டியின் மறுசுழற்சியால் சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கும் கழிவுப்பொருட்களைக் குறைக்கிறது, இதனால் உலகளவில் ஏற்படும் மாசுபாடும் குறையும்

பி.இ.டி இந்தியாவிலேயே, 90% க்கும் மேற்பட்ட PET பிளாஸ்டிக் மறுசுழற்சி செய்யப்படுகிறது.
 
கண்ணாடி


பிளாஸ்டிக்கிற்கு ஒரு சிறந்த மாற்று வழி கண்ணாடி ஆகும், கண்ணாடியை பேக்கேஜிங் பொருளாக நுகர்வோர்அதிகம் பயன்படுத்துகின்றனர். ஏனெனில் இது மணல், சோடா சாம்பல் மற்றும் சுண்ணாம்பு போன்ற அனைத்து இயற்கை பொருட்களையும் உட்கொண்டுள்ளது. கண்ணாடியையும் 100% மறுசுழற்சி செய்யலாம். மறுசுழற்சி செய்யப்பட்ட கண்ணாடிகள் வெறும் 30 நாட்களில் கடை அலமாரிகளை அடைய முடியும் என்பதை உங்களால் நம்ப முடிகிறதா?

எனினும் கண்ணாடிகளின் பயன்பாட்டில் சில குறைபாடுகளும் உள்ளன.

- பி.இ.டி பேக்கேஜிங் உடன் ஒப்பிடும்போது கண்ணாடிகளின் பயன்பாட்டில் எடை பிரச்சினை மற்றும் போக்குவரத்தின் போது உடைந்து போகும் ஆபத்து நிறைந்துள்ளது.