Dec 05, 2020
ஸ்பெஷல்

LED மாஸ்க்!

நன்றி குங்குமம்

தங்க மாஸ்க், வைர மாஸ்க் வரிசையில் இப்போது புதிதாக சேர்ந்திருக்கிறது எல்இடி மாஸ்க். இதை உருவாக்கியவர் புகழ்பெற்ற ஃபேஷன் டிசைனரான செல்ஷியா. நவீன தொழில்நுட்பத்தையும் லேட்டஸ்ட் ஃபேஷனையும் இணைத்து இவர் வடிவமைக்கும் ஆடைகளுக்கு மேற்கத்திய நாடுகளில் செம மவுசு. சமீபத்திய இவரது டிசைனான எல்இடி மாஸ்க்கும் சக்கைப்போடு போடுகிறது. இந்த மாஸ்க்கில் எல்.இ.டி விளக்குகள் எழுத்து மற்றும் எண் வடிவில் இருக்கும்.

இரவு நேரங்களில் யாராவது உங்களுக்கு அருகில் நின்றால் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்கும் பொருட்டு அவரைத் தள்ளி நிற்கச் சொல்ல இந்த மாஸ்க் ஒளியைப் பாய்ச்சும். App மூலம் எல்இடி விளக்குகளைக் கட்டுப்படுத்தலாம். மாஸ்க்கைத் துவைக்கும்போது பேட்டரி மூலம் இயங்கும் இந்த விளக்குகளைக் கழற்றி வைக்க முடியும். விற்பதன் மூலம் கிடைக்கும் பணத்தை உலகச் சுகாதார நிறுவனத்தின் கோவிட் - 19 நல நிதிக்குக் கொடையாக வழங்கவிருக்கிறார் செல்ஷியா.

தொகுப்பு: த.சக்திவேல்