Dec 03, 2020
விளையாட்டு

ஐபிஎல் டி20: சென்னை அணியை பந்தாடிய மும்பை அணி !. விக்கெட்டுக்கள் இழப்பின்றி அபார வெற்றி

ஷார்ஜா: ஐபிஎல் டி20 தொடரில் சென்னை அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணி விக்கெட்டுக்கள் இழப்பின்றி  அபார வெற்றி பெற்றது. ஷார்ஜாவில் நடைபெறும் போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சு தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய சென்னை அணி, 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 114 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து 115 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை அணி 12.2 ஓவர்களில் விக்கெட்டுக்கள் இழப்பின்றி வெற்றி பெற்றது.