Dec 04, 2020
விளையாட்டு

சில்லி பாயின்ட்...

* ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்டது, ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தை எந்தவித நெருக்கடியும் இல்லாமல் எதிர்கொள்ள உதவும் என  நம்புகிறேன் என்று இந்திய அணி வேகம் முகமது ஷமி தெரிவித்துள்ளார்.
* தந்தையின் இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்காக நாடு திரும்பாமல், இந்திய அணியுடன் தங்கியிருக்க முடிவு செய்துள்ள முகமது சிராஜின் மன  உறுதியை பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி வெகுவாகப் பாராட்டி உள்ளார்.
* 2021 ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடர் திட்டமிட்டபடி தொடங்கும். தொடர் தாமதமாகும் அல்லது தள்ளிப்போகும் என்ற  பேச்சுக்கே இடமில்லை என்று ஆஸி. ஓபன் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
* கொரோனா அச்சுறுத்தல் காரணமாக வீட்டில் முடங்கியிருந்த இந்திய மகளிர் கால்பந்து அணி வீராங்கனைகள், விரைவில் பயிற்சியை தொடங்க  உள்ளனர்.