Apr 11, 2021
விளையாட்டு

6 பந்தில் 6 சிக்சர் : இலங்கை அணியை பந்தாடிய பொல்லார்ட்...!

கொழும்பு: இலங்கை அணிக்கு எதிரான டி20 போட்டியில் 6 பந்துகளில் 6 சிக்ஸர்கள் விளாசி வெஸ்ட் இண்டீஸ் வீரர் கெய்ரன் பொல்லார்ட் சாதனைப் படைத்துள்ளார். கெய்ரன் பொல்லார்ட், ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்திய தனஞ்சயா வீசிய 6 ஆவது ஓவரில் 6 சிக்ஸர்கள் பறக்கவிட்டு கெத்து காட்டினார். இறுதியில் 13.1 ஓவரில் 134 ரன்கள் சேர்த்து 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அசத்தலான வெற்றியை பெற்றது. ஆட்டநாயகன் விருதை பொல்லார்ட் தட்டிச்சென்றார். ஒரு போட்டியில் ஹாட்ரிக் விக்கெட் மற்றும் தொடர்ந்து 6 சிக்ஸர் அடித்திருப்பது இதுவே முதல்முறையாகும். அதுவும் ஒரே பவுலருக்கு எதிராக இந்த சாதனை நடந்திருப்பது குறிப்பிடத்தக்கது.