Apr 05, 2020
தமிழகம்

திருச்சி காந்தி மார்க்கெட்டில் சில்லறையில் காய்கறிகள் வாங்கும் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை

திருச்சி: காந்தி மார்க்கெட்டில் சில்லறையில் காய்கறிகள் வாங்கும் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை. காந்தி மார்க்கெட் இரவு 9 மணி முதல் காலை 7 மணி வரை மட்டுமே செயல்படும். காந்தி மார்க்கெட் சனி, ஞாயிறு நாட்களில் செயல்படாது. சில்லறை விற்பனையாளர்கள் மொத்தவிலை வியாபாரியிடமிருந்து காய்கறிகளை வாங்கிக் கொள்ளலாம் எனவும் ஆட்சியர் அறிவித்துள்ளார்.