Jul 12, 2020
தமிழகம்

காஞ்சி மேற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் இந்திய ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி

காஞ்சிபுரம்: லடாக் எல்லையில் வீர மரணம் அடைந்த இந்திய ராணுவ வீரர்களுக்கு, காங்கிரஸ் சார்பில்,அஞ்சலி செலுத்தப்பட்டது. சீன ராணுவத்துடன் லடாக் எல்லையில் ஏற்பட்ட மோதலில், வீரமரணம் அடைந்த இந்திய ராணுவ வீரர்களுக்கு காஞ்சிபுரம் மேற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி, காஞ்சிபுரம் காமராஜர் சாலையில் உள்ள அலுவலகத்தில் நடந்தது.

மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜி.வி.மதியழகன் தலைமை தாங்கினார். நகர தலைவர் இராம.நீராளன் முன்னிலை வகித்தார். சீன ராணுவத்தினரின் தாக்குதலால் வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களுக்கு 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.இதில் மாவட்ட நிர்வாகிகள் வீரபத்திரன், லோகநாதன், நகர நிர்வாகிகள் கருணாமுர்த்தி, சுகுமாரன், சந்தானம், இளங்கோவன், பாலாஜி, ராமலிங்கம், பாலாஜி, பவுல், சம்பத், ஜெகநாதன் உள்பட பலர்
கலந்துகொண்டனர்.