Oct 27, 2021
தமிழகம்

ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான பணிகள்: தேர்தல் பார்வையாளர்கள் ஆய்வு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் பணிகளை மாவட்ட தேர்தல் பார்வையாளர் அமுதவள்ளி, மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் கலெக்டர் ஆர்த்தி ஆகியோர் ஆய்வு செய்தனர். காஞ்சிபுரம் மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான பணிகளுக்கு தேவையான அச்சுப் பணிகளை மேற்கொள்ள உள்ள அரசு கூட்டுறவு அச்சகம், ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணும் மையங்களான பொன்னேரிக்கரை அண்ணா பல்கலைக்கழக உறுப்பு பொறியியல் கல்லூரி, ஏனாத்தூர் சங்கரா கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆகிய இடங்களில் தேர்தல் பார்வையாளர் மற்றும் மாவட்ட கலெக்டர் ஆகியோர் நேரில் சென்று ஆய்வு செய்தனர். ஆய்வின்போது, எஸ்பி சுதாகர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஸ்ரீதேவி உள்பட பலர் இருந்தனர்.