Dec 07, 2021
தமிழகம்

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 39,634 கனஅடியாக உயர்வு

சேலம்: மேட்டூர் அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு 13,477 கனஅடியில் இருந்து 39,634 கனஅடியாக அதிகரித்துள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 97.80 அடியாக உயர்ந்துள்ளது. அணையில் நீர்இருப்பு 62.02 டிஎம்சியாகவும் அதிகரித்துள்ளது. மேட்டூர் அணையிலிருந்து டெல்டா பாசனத்துக்கு வினாடிக்கு 100 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. மேட்டூர் கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய் பாசனத்திற்கான நீர்திறப்பு 550 கனஅடியாக உள்ளது.