Dec 01, 2021
தமிழகம்

நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடியில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம்

சென்னை: நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடியில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் நாளை கனமழையும், 29ம் தேதி முதல் 31ம் தேதி வரை மிக கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை 2 நாட்களுக்கு லேசான மழை பெய்யக்கூடும் எனவும் வானிலை மையம் அறிவித்துள்ளது. தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம், பட்டுக்கோட்டை, கோபிச்செட்டிப்பாளையத்தில் தலா 4 செ.மீ மழை பதிவாகியுள்ளது.