தமிழகம்
இயக்குனர் கவுரி மனோகர் மாரடைப்பால் மரணம்
போடி: தேனி மாவட்டம் போடி பகுதியை சேர்ந்தவர் நடராஜ். அவரது மூத்த மகன் ஞானமுருகேசன் என்கிற கவுரி மனோகர் (68). ‘டார்லிங் டார்லிங் டார்லிங்’, ‘முந்தானை முடிச்சு’, ‘வளர்த்த கடா’, ‘ஒரு தாயின் இதயம்’ ஆகிய படங்களில் துணை இயக்குனராக பணியாற்றினார். பிறகு 1994ல் கவிஞர் மு.மேத்தா தயாரித்த ‘தென்றல் வரும் தெரு’ என்ற படத்தை இயக்கினார்.
தொடர்ந்து ‘உறவுக்கு மரியாதை’, ‘காசு’, ‘உதய நேரம்’ ஆகிய படங்களை எழுதி இயக்கினார். நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருந்த கவுரி மனோகர், நேற்று முன்தினம் இரவு சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது மாரடைப்பால் மரணம் அடைந்தார். அவருக்கு மனைவி, மகள், மகன் இருக்கின்றனர்.