Aug 04, 2020
தொழில்நுட்பம்

மலிவு விலையில் 5000mAh திறன்கொண்ட போன்!

நன்றி குங்குமம் முத்தாரம்

ஒவ்வொரு வாரமும் தவறாமல் ஒரு புது மாடல் ஸ்மார்ட்போன் சந்தையில் இறங்குவது வாடிக்கையாகிவிட்டது. அந்த வகையில் இந்த வாரத்தின் புது வரவு ‘விவோ ஒய் 11’. இந்தியாவில் கணிசமான வாடிக்கையாளர்களைத் தன்வசமாக்கி விட்ட விவோ நிறுவனம், மற்ற வாடிக்கையா ளர்களையும் ஈர்க்க தீட்டிய திட்டம்தான் இந்த மாடல் என்று இதன் விலையிலும், தொழில்நுட்ப வசதி களிலும் தெரிகிறது. இப்போது விற்பனை யிலும் சக்கைப்போடு போட்டு வருகிறது. அப்படி இதில் என்ன தான் இருக்கிறது என்று பார்ப்போம்.

பார்த்தவுடனே வாங்கத் தூண்டும் விதமாக கவர்ச்சியாக வடிவமைத்துள்ளனர். மெகா சைஸில் 6.35 இன்ச்சில் ஹெச். டியுடன் கூடிய ஃபுல் வியூ டிஸ்பிளே, துல்லியமான காட்சி அனுபவத்திற்கு  720 x 1544 பிக்ஸல் ரெசல்யூசன், 190 கிராம் எடை, வேகமான செயல்பாட்டுக்கு 3 ஜிபி ரேம், 32 ஜிபி ஸ்டோரேஜ், அன்லாக் செய்ய ஃபிங்கர் பிரின்ட் வசதி, 13 எம்பியில் முதன்மை கேமரா, 2 எம்பியில் டெப்த் கேமரா என இரண்டு பின்புற கேமராக்கள், செல்ஃபிக்குத் தனியாக 8 எம்பியில் முன்புறத்தில் ஒரு கேமரா, ஒரு நாள் முழுவதும் சார்ஜ் நிற்க 5000mAh திறன் கொண்ட பேட்டரி, 256 ஜிபி வரை ஸ்டோரேஜை நீட்டித்துக்கொள்ளலாம். ஹெச்.டி. தரத்தில் வீடியோக்களைப் பதிவு செய்யும் வசதி,  இப்படி ஏகப்பட்ட வசதிகள் கொண்ட இந்தப் போனின் விலை ரூ.8,990.