Jul 07, 2020
தொழில்நுட்பம்

டெக் புதுசு

நன்றி குங்குமம் முத்தாரம்

நெக்லஸ் ஃபேன்


வெயில் அதிகமான பகுதிகளுக்குச் செல்லும்போது வியர்வை அதிகமாக உடலில் சுரக்கும். குறிப்பாக கழுத்துப்பகுதியில் அசூயையான உணர்வு ஏற்படும். விசிறியால் நீண்ட நேரம் வீசிக்கொண்டே இருக்க முடியாது. அந்த நேரத்தில் ஃபேன் இருந்தால் நல்லாயிருக்குமே என்று தோன்றும். ஆனால், நாம் இருக்கும் இடம் வெட்ட வெளியாக இருக்கும்.

என்ன செய்வது என்று யோசிப் பவர்களுக்காகவே வந்துவிட்டது. நெக்லஸ் ஃபேன். ஒயர்லெஸ்ஹெட் போனைப் போல இதைக் கழுத்தில் மாட்டிக்கொள்ளலாம். பேட்டரியை சார்ஜ் செய்துவிட்டால் மூன்று முதல் ஆறு மணி நேரம் வரை ஓடும். 360 டிகிரியில் சுழலுவது இதன் சிறப்பு.
 
டேப்லெட் பேட்


இது குழந்தைகளுக்காக பிரத் யேகமாக வடிவமைக்கப்பட்ட டேப்லெட் பேட். குழந்தைகள் இதில் வரையலாம், எழுதலாம். கண்களைப் பாதிக்காத வகையில்ஸ்க்ரீனை டிசைன் செய்திருக் கின்றனர். எழுதியதை அழித்து மறுபடியும் மறுபடியும் எழுதலாம் என்பதால் நோட் புக் வாங்க வேண்டிய அவசியமும் பெரிதாக இருக்காது. விலை ரூ. 500-லிருந்து ஆரம்பிக்கிறது.