Feb 27, 2020
தொழில்நுட்பம்

பாலீ

நன்றி குங்குமம் முத்தாரம்

தொழில்நுட்பத் துறையில் மிகப்பெரிய பாய்ச்சல் என்று பாலீயைக் கொண்டாடுகின்றனர். இதுவொரு சுழன்று செயல்படும் எந்திரன். ‘சாம்சங்’ நிறுவனம் இதை அழகாக வடிவமைத்திருக்கிறது. கடந்த வாரம் நடந்த சர்வதேச எலெக்ட்ரானிக் ஷோவில் காட் சிக்கு  வைக்கப்பட்ட  ஆயிரக் கணக்கான நவீன தயாரிப்புகளில் பாலீக்குத்தான் அதிக வரவேற்பு.

‘‘பாலீ உங்களைப் புரிந்துகொள்கிறது, உங்களுக்கு உதவியாக இருக்கிறது, உங்களின் தேவைகளை பூர்த்தி செய்கிறது...’’ என்ற அடைமொழியுடன் வெளியாகி யிருக்கும் இந்த எந்திரன் ஸ்மார்ட் ஹோம்களுக்கு உகந்ததாக இருக்கிறது. வீட்டில் இருக்கும் அனைத்து வகையான ஸ்மார்ட் டிவைஸ்களையும் கட்டுப்படுத்தும் ரிமோட்டாக விளங்கும் பாலீ, யாராவது கீழே விழுந்துவிட்டால் அவரைத் தூக்க உடனே உதவியை நாடுகிறது.

இதுபோக வீட்டில் யாருமில்லாத போது நாய்களுக்கு தொலைக்காட்சியைப் போட்டுக் காண்பிக் கிறது. மிகச் சிறிய அளவில் ஒரு பந்தைப் போல இதை வடிவமைத்திருக்கிறார்கள். தவிர, உடல் ஆரோக்கியத்தைக் கவனித்துக்கொள்ள ஃபிட்னஸ் அசிஸ்டெண்ட் போல செயல்படுகிறது. மொத்தத்தில் இதுவொரு ஸ்மார்ட் ஹோம் நிர்வாகி.