Apr 04, 2020
தொழில்நுட்பம்

இரவு நேரங்களிலும் மின்சக்தியை பிறப்பிக்க தயாராகும் சூரியப்படல்கள்

பகல் நேரங்களில் ஓரிய ஒளியை மின்சக்தியாக மாற்றக்கூடிய வல்லமை சூரியப்படல்களுக்கு காணப்படுகின்றது. எனினும் மழை காலங்களில் இதன் வினைத்திறன் குறைவாக இருப்பதுடன், இரவு நேரங்களில் மின்சக்தியை துளி அளவும் பிறப்பிக்காது. எனினும் புதிய ஆய்வு ஒன்றின்படி இரவு நேரங்களிலும் சூரியப் படல்களில் இருந்து மின்சக்தியை உற்பத்தி செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமாத்திரமன்றி பகல் முழுவதும் பிறப்பிக்கப்படும் மின் சக்தியின் நான்கில் ஒரு பங்கு மின்சக்தியை இரவு நேரத்தில் பிறப்பிக்க முடியும் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

இது தொடர்பான ஆய்வுகள் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இதேவேளை இரவு நேரங்களில் மின்சக்திய பிறப்பிக்கும் சூரியப் படல்களை வெப்பமான பிரதேசத்தில் பயன்படுத்தும் போது என்ன நடக்கும் என்பது தொடர்பான ஆய்வுகளையும் தாம் மேற்கொண்டவருவதாக ஆய்வுக் குழுவில் அங்கம் வகிக்கும் Jeremy Munday என்பவர் தெரிவித்துள்ளார்.