Dec 02, 2020
தொழில்நுட்பம்

டெக் புதுசு

நன்றி குங்குமம் முத்தாரம்

ஒயர்லெஸ் இயர்போன்

இயர்போன், ஹெட்போனில் ஸ்பெஷலிஸ்ட் ‘சென்ஹெய்ஸர்’. சமீபத்தில் ‘CX350BT’ , ‘CX150BT’ என்ற இரண்டு மாடல் ஒயர்லெஸ் இயர்போன்களை அறிமுகம் செய்துள்ளது. ஒரு முறை பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் 10 மணி நேரம் இடைவிடாமல் இயங்கும் என்பது இதன் சிறப்பு. புளூடூத் வழியாக இதை லேப்டாப், ஸ்மார்ட்போனுடன் கனெக்ட் செய்துகொள்ளலாம். கருப்பு மற்றும் வெள்ளை என இரண்டு வண்ணங்களில் கிடைக்கிறது.

சவுண்ட் பார்

டால்பி அட்மோஸ், 3டி சவுண்ட் சிஸ்டத்துடன் கூடிய அதிநவீன சவுண்ட் பாரை அறிமுகம் செய்திருக்கிறது ‘சென்ஹெய்ஸர்’. 13 ஸ்பீக்கர் , 6 வூப்பர்களுடன் 5 டுவீட்டர்ஸ், இரண்டு டாப் ஃபயரிங் ஃபுல் ரேஞ்ச் ஸ்பீக்கர்களுடன் சேர்ந்து வடிவமைக்கப்பட்டிருக்கிறது இந்த ஆம்பியோ சவுண்ட் பார். ஹோம் தியேட்டர் பிரியர்களுக்கு ரொம்பவே ஏற்றது இந்த சவுண்ட் பார். ஸ்மார்ட் கன்ட்ரோல் ஆப் மூலம் இதனைக் கட்டுப்படுத்த முடியும். விலை ரூ.1,99,990