Oct 22, 2020
தொழில்நுட்பம்

நிதி ஆதார ரத்த ஓட்டம் தடைப்பட்டுள்ளதால், #EMI க்கான அவகாசத்தை மேலும் 6 மாதங்களுக்கு நீட்டித்திடுக! : மு.க.ஸ்டாலின் வலியறுத்தல்!!

சென்னை :வங்கிக் கடன் இஎம்ஐ செலுத்துவதற்கான அவகாசம் ஆக-31க்கு மேல் நீட்டிக்கப்படாது என்ற தகவல், கொரோனா பாதிப்பால் தவிக்கும் தனிநபர்கள், சிறுகுறு நிறுவனங்களுக்கு அதிர்ச்சி வைத்தியமாக உள்ளது என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நிதி ஆதார ரத்த ஓட்டம் தடைப்பட்டுள்ளதால், #EMI க்கான அவகாசத்தை மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்க வேண்டும் என்று ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். வங்கிகளில், தனிநபர் மற்றும் நிறுவனங்கள் பெற்ற கடனுக்கான தவணைத் தொகையை (இஎம்ஐ) செலுத்துவதற்கு வழங்கப்பட்ட கால அவகாசம் இன்றுடன் முடிகிறது.