Dec 03, 2020
தொழில்நுட்பம்

சீனாவின் முன்னணி கைப்பேசி வடிவமைப்பு நிறுவனமான Realme அறிமுகம் செய்யும் புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசிகள்..!!

சீனாவை சேர்ந்த முன்னணி ஸ்மார்ட் கைப்பேசி வடிவமைப்பு நிறுவனமான Realme இரு புதிய ஸ்மார்ட் கைப்பேசிகளை அறிமுகம் செய்துள்ளது. Realme 7 மற்றும் 7 Pro எனும் குறித்த கைப்பேசிகள் ஐரோப்பாவில் அறிமுகம் செய்து வைக்கப்பட்டுள்ளன. இவற்றில் Realme 7 ஆனது 6.5 அங்குல அளவுடைய தொடுதிரை, MediaTek Helio G95 processor, பிரதான நினைவகமாக 6GB அல்லது 8GB RAM மற்றும் 64GB அல்லது 128GB சேமிப்பு நினைவகத்தினைக் கொண்டதாக காணப்படுகின்றது. அத்துடன் இக் கைப்பேசியில் 16 மெகாபிக்சல்களை உடைய செல்ஃபி கமெரா, 64 மெகாபிக்சல்கள், 8 மெகாபிக்சல்கள், தலா 2 மெகாபிக்சல்களை உடைய இரு கமெராக்கள் என மொத்தமாக 4 பிரதான கமெராக்களையும் உள்ளடக்கியுள்ளது.

அதேபோன்று Realme 7 Pro ஆனது 6.4 அங்குல அளவுடைய தொடுதிரை, Snapdragon 720 processor, பிரதான நினைவகமாக 6GB அல்லது 8GB RAM மற்றும் 128GB சேமிப்பு நினைவகம் என்பவற்றினைக் கொண்டுள்ளது. தவிர 32 மெகாபிக்சல்களை உடைய செல்ஃபி கமெரா, 64 மெகாபிக்சல்கள், 8 மெகாபிக்சல்கள், தலா 2 மெகாபிக்சல்களை உடைய இரு கமெராக்கள் என மொத்தமாக 4 பிரதான கமெராக்களையும் உள்ளடக்கியுள்ளது.