Dec 05, 2020
தொழில்நுட்பம்

அட்டகாசமான வசதி!: skyBOX அறிமுகம் செய்யும் வயர்லெஸ் SSD சேமிப்பகம்

தற்போது வன்றட்டுக்களை விடவும் SSD சேமிப்பு சாதனங்களே அதிகளவில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இதற்கு எடை குறைந்ததாக இருத்தல், குறைந்தளவு மின்னுகர்வு மற்றும் தரவுப் பரிமாற்ற வேகம் கூடியது என்பன காரணமாக அமைந்துள்ளன. இப்படியிருக்கையில் இச்சேமிப்பு சாதனத்தில் மற்றுமொரு அட்டகாசமான வசதி உட்புகுத்தப்பட்டுள்ளது. அதாவது வயர்லெஸ் தொடர்பாடல் முறையான WiFi மூலம் தரவுப் பரிமாற்றத்தை மேற்கொள்ளக்கூடியதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதனை skyBOX நிறுவனம் வடிவமைத்துள்ளது. தற்போது 4 TB சேமிப்பு கொள்ளவுடைய சாதனம் உருவாக்கப்பட்டுள்ளது. அத்துடன் இதன் தரவுப் பரிமாற்ற வேகமானது ஒரு செக்கனுக்கு 2200 Mb ஆகவும் காணப்படுகின்றது. மேலும் இதன் விலையானது தற்போது 43 சதவீத விலைக்கழிவுடன் 479 டொலர்களாக காணப்படுகின்றது.