Dec 01, 2020
தொழில்நுட்பம்

Zoom அப்பிளிக்கேஷனில் Virtual Background உருவாக்குவது எப்படி?

பல அட்டகாசமான வசதிகளை உள்ளடக்கியுள்ள Zoom வீடியோ கொன்பரன்ஸ் அப்பிளிக்கேஷன் ஆனது இன்று அதிகளவானவர்களால் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இந்த அப்பிளிக்கேஷன்களில் தரப்பட்டுள்ள முக்கியமான வசதிகளில் ஒன்றாக பின்னணியை மாற்றுவதும் காணப்படுகின்றது. இவ் வசதியினைப் பெறுவதற்கு 5.3.52640.0920 பதிப்பு அல்லது அதன் பின்னரான பதிப்பு அவசியம் ஆகும். எனவே உங்கள் மொபைல் சாதனத்தில் இவ்வாறானதொரு Zoom பதிப்பு இருப்பதை முதலில் உறுதிப்படுத்திக்கொள்ளவும்.

அதன் பின்னர் இடது பக்க கீழ் மூலையில் உள்ள 3 புள்ளிகளை கிளிக் செய்து மெனுவிற்கு செல்லவும். அங்கு காணப்படும் Virtual Background என்பதை கிளிக் செய்யவும். இங்கு சில பின்னணிகள் தரப்பட்டிருக்கும் அவற்றில் ஒன்றினை தெரிவு செய்துகொள்ள முடியும். அலலது + பொத்தானை கிளிக் செய்து மொபைல் சாதனத்தில் உள்ள வேறொரு பின்னணியையும் பயன்படுத்திக்கொள்ள முடியும்.