Dec 01, 2020
தொழில்நுட்பம்

iPhone 12 Pro Max கைப்பேசியின் மின்கலம் தொடர்பான தகவல் வெளியீடு..!!

ஆப்பிள் நிறுவனம் கடந்த வாரம் தனது 4 புதிய ஐபோன்களை அறிமுகம் செய்துள்ளது. இவற்றில் iPhone 12 Pro Max எனும் கைப்பேசியும் உள்ளடங்குகின்றது. இந்நிலையில் குறித்த கைப்பேசியின் மின்கலம் தொடர்பான தகவல் தற்போது வெளியாகியுள்ளது. இதன்படி 3,687 mAh மின்கலம் இணைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இம்மின்கலமானது ஏனைய ஐபோன்களில் தரப்பட்டுள்ள கைப்பேசிகளை விடவும் 7 சதவீதம் சிறியதாகும். தவிர இம் மின்கலம் முழுமையாக சார்ஜ் செய்த நிலையில் தொடர்ச்சியாக 20 மணி நேரம் வீடியோக்களை பார்வையிட முடியும். அத்துடன் 80 மணி நேரம் பாடல்களை கேட்கவும் முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.