Jan 19, 2021
தொழில்நுட்பம்

Google Pay வசதியில் புதிய சலுகை: மகிழ்ச்சியில் பயனர்கள்

தற்போதைய தொழில்நுட்ப வளர்ச்சியின் உச்சம் காரணமாக ஒன்லைன் மூலமான பணப்பரிமாற்றம் வேகமாக வளர்ந்து வருகின்றது. அத்துடன் கடந்த சில மாதங்களாக உலகின் பல நாடுகளையும் அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ் தொற்றினை அடுத்து பணத்தாள்களை பயன்படுத்துவதற்கு அச்சப்பட்டு இவ்வாறான ஒன்லைன் பணப்பரிமாற்ற முறையே பயன்படுத்தப்படுகின்றது. இச்சேவையை வழங்கும் நிறுவனங்களில் கூகுளும் ஒன்றாகும்.

கூகுளின் Google Pay சேவையில் இந்தியாவிற்கு உள்ளே பணப்பரிமாற்றம் மேற்கொள்ளும் போது எந்தவிதமான பணப்பரிமாற்ற கட்டணங்களும் அறவிடப்படமாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது அமெரிக்காவிற்கான பதிப்பு மற்றும் இந்தியாவிற்கான பதிப்பு என இரு Google Pay பதிப்புக்களை கூகுள் பயன்படுத்தி வருகின்றது. இவற்றில் இந்தியாவிற்கான Google Pay பதிப்பிலேயே இச்சலுகை வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.