Jan 28, 2021
தொழில்நுட்பம்

மோட்டோரோலா 5ஜி மொபைல் (விலை சுமார் ரூ.20,999)

மோட்டாரோலா நிறுவனம், மோட்டோ ஜி 5ஜி மொபைலை அறிமுகம் செய்துள்ளது. குவால்காம் ஸ்நாப்டிராகன் 750ஜி பிராசஸர், 5,000 எம்ஏஎச் பேட்டரி, 48 மெகா பிக்சல் உட்பட 3 முன்புற கேமரா, 6.7 அங்குல முழு எச்டி பிளஸ் டிஸ்பிளேயுடன் அறிமுகம் செய்துள்ளது. கடந்த மாத துவக்கத்தில் ஐரோப்பிய சந்தையில் அறிமுகமான இது, இந்திய சந்தைக்கும் வந்து விட்டது. அதிகபட்ச சில்லறை விலை ₹24,999. இருப்பினும் அறிமுகச் சலுகையாக 6 ஜிபி + 128ஜிபி மெமரியுடன் சுமார் ₹20,999 என அறிவிக்கப்பட்டுள்ளது.