Jan 19, 2021
தொழில்நுட்பம்

விரைவில் வாட்ஸ்அப்பில் 7 புதிய வசதிகள்

வாஷிங்டன்: விரைவில் வாட்ஸ்அப்பில் 7 புதிய வசதிகள் வரவுள்ளன. இந்திய அளவில் மட்டுமில்லாமல் உலக அளவிலும் பல கோடி மக்கள் தினசரி பயன்படுத்தும் ஒரு செயலியாக தற்போது வாட்ஸ்அப் மாறி உள்ளது. வாட்ஸ் அப்பை பேஸ்புக் நிறுவனம் விலைக்கு வாங்கிய பின்னர் வாட்ஸ்அப்பில் பல்வேறு அப்டேட்களை வாட்ஸ்அப் நிறுவனம் வழங்கிறது. பேஸ்புக் கட்டுப்பாட்டில் இயங்கும் வாட்ஸ்அப் இந்தியாவில் சுமார் 2 பில்லியன் பயனாளர்களை கொண்டுள்ளது.

வாட்ஸ்அப்பில் பாதுகாப்பு வசதியை அதிகரிக்கும் நோக்கிலும் பயனாளிகளை கவரும் விதத்திலும் புதிய அப்டேட்கள் வெளியாகி வருகின்றன. எதிர்கால அப்டேட்களை கருத்தில் கொண்டு தற்போது வாட்ஸ் அப்பில் ஒரு புதிய மாற்றத்தை கொண்டு வர முடிவு செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் 2021-ல் வர உள்ள 7 புதிய வசதிகள் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

7 புதிய வசதிகள் என்ன?
1. வாட்ஸ் அப் WEB மூலம் ஆடியோ மற்றும் அழைப்புகள்
2. ஒரு கணக்கை பல இடங்களில் பயன்படுத்த முடியும்
3. ஒலி இல்லாமல் வீடியோக்களை அனுப்பும் வசதி
4. பின்னர் படிக்க என்கிற வசதி
5. குழு கலந்துரையாடலில் பங்கேற்க முடியாமல் போனவர்கள் இடையில் இணைந்து கொள்ளலாம்
6. அதிக புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை ஒரே முறையில் அனுப்பலாம்
7. வாட்ஸ் அப்பில் காப்பீட்டு தயாரிப்புகள் இணைப்பு வசதியும் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இது வாட்ஸ் அப் பயன்படுத்தும் பயனாளர்களுக்கு மிகவும் பயன்படும் வகையில் இருப்பதாக கூறப்படுகிறது.