Jan 16, 2021
தொழில்நுட்பம்

2கே டிஎஸ்பிளேயுடன் மி11 (விலை சுமார் ₹45,000 முதல்)

ஷாவ்மி நிறுவனம் மி 11 என்ற பெயரில் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. 6.81 அங்குல டிஸ்பிளே, குவால்காம் ஸ்நாப்டிராகன் 888 பிராசஸர், முன்புற கேமரா 20 மெகா பிக்சல், பின்புற கேமரா 108 மெகாபிக்ஸ் மற்றும் 13, 5 மெகாபிக்ஸல், 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி என உயர்ரக போன்களுக்கு போட்டியாக களம் இறக்கியுள்ளது. இந்திய சந்தைக்கு வரவில்லை. விலை இந்திய மதிப்பில் 8 ஜிபி ரேம், 256 ஜிபி மெரரி சுமார் ₹45,000, 12 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி சுமார் ₹52,800 இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.