Feb 25, 2021
தொழில்நுட்பம்

சான்டிஸ்க் எக்ஸ்ட்ரீம் புரோ போர்ட்டபிள் ஹார்ட்டிஸ்க்குகள் (விலை சுமார் ரூ.49,800 முதல்)

வெஸ்டர்ன் டிஜிட்டல் நிறுவனம் 4 வகையான போர்ட்டபிள் ஹார்ட்டிஸ்க்குகளை அறிமுகம் செய்கிறது. 4 டெராபைட் கொண்ட சான்டிஸ்க் எக்ஸ்ட்ரீம் புரோ போர்ட்டபிள் எஸ்எஸ்டி, சான்டிஸ்க் எக்ஸ்ட்ரீம் போர்ட்டபிள் எஸ்எஸ்டி, டபிள்யூடி பிளாக் பி50 கேம் டிரைவ் எஸ்எஸ்டி, மை பாஸ்போர்ட் எஸ்எஸ்டி என்ற இந்த நான்கிலும், அதி வேகமாக பைல்களை சேமித்து வைக்கவும் திறக்கவும் முடியும். மாடல்களுக்கு ஏற்ப நொடிக்கு 1,000 எம்.பி முதல் 2,000 எம்பி வரை பைல்களை இதில் காப்பி செய்யலாம் என இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்திய மதிப்பில் மாடல்களுக்கு ஏற்ப சுமார் ₹49,800 முதல் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில், பிளாக் பி50 கேம் டிரைவ் ஹார்ட் டிஸ்க் கம்ப்யூட்டர், பிளே ஸ்டேஷன், எக்ஸ்பாக்ஸ் ஒன் ஆகியவற்றில் பயன்படுத்த முடியும். இலவசமாக கேம்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இதன் விலை இந்திய மதிப்பில் ₹55,000 இருக்கும் என தெரிகிறது. நடப்பு காலாண்டில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.