Dec 01, 2021
தொழில்நுட்பம்

மோட்டோ இ61

மோட்டோரோலா நிறுவனம், மோட்டோ இ61 என்ற ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. ஆன்டிராய்டு 10 கோ எடிஷன் இயங்குதளம் கொண்ட இந்த மொபைல், 6.1 அங்குல எச்டி பிளஸ் தொடுதிரை,  வாட்டர் டிராப் நாட்ஸ் 5 மெகா பிக்சல் செல்பி கேமரா, பின்புறம் 13 மெகாபிக்சல் மற்றும் 2 மெகாபிக்சல் டூயல் கேமரா, யுனிசாக் டைகர் ஆக்டோகோர் பிராசஸர், 2 ஜிபி ரேம், 32 ஜிபி மெமரி, மைக்ரோ  எஸ்டி கார்டு, பின்புற பிங்கர் ஸ்கேனர், 3,000 எம்ஏஎச் பேட்டரி, 10 வாட்ஸ் சார்ஜர் உடன் வருகிறது. சர்வதேச சந்தையில் அறிமுகம் ஆகியுள்ளது. இந்தியாவில் பட்ஜெட் ஸ்மார்ட்போன் விலையில்  சந்தைப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.